இலங்கை செய்திகள்

மகா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு

13 Feb 2018

உலக வாழ் இந்துக்களால் இன்று மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

பல மகிமைகளைக் கொண்ட மகா சிவராத்திரி விரதமானது ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி இரவில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இன்றைய தினத்தில் இலங்கையில் அமைந்துள்ள சிவாலயங்கள் மற்றும் ஏனைய ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது சிறப்பம்சமாகும்.

இதேவேளை , ஐம்பொறிகளின் வழியே மனதை அலையவிடாது அதனை ஐக்கியப்படுத்தி, இறை சிந்தனையுடன் இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் விரதங்களுள் மகா சிவராத்திரி விரதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தினத்தில் உலகெங்கும் சமாதானம் ஏற்பட வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன, மத பேதமின்றி ஒவ்வொருவரினதும் கலாசார, மத விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்