வாழ்வியல் செய்திகள்

ப்ளம்ஸில் மருத்துவ பயன்

21 Feb 2017

உடலின் அடிவயிற்றில் அதிகப்படியான கொழுப்புகள் தேங்குவதால் தான் தொப்பை பிரச்சனை ஏற்படுகிறது. 

இதற்கு அன்றாடம் நாம் உட்கொள்ளும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் முக்கிய காரணமாக உள்ளது. 

எனவே நமது உடம்பில் உள்ள கெட்டக் கொழுப்பினை கரைத்து, தொப்பையைக் குறைக்க அற்புத பானம் இதோ! 

தேவையான பொருட்கள் 

ப்ளம்ஸ் - 100 கிராம்

தண்ணீர் - 1 லிட்டர்

தயாரிக்கும் முறை 

ஒரு பாத்திரத்தில் ப்ளம்ஸ் பழங்களை துண்டுகளாக நறுக்கி, அதில் நீர் ஊற்றி, காற்று புகாதவாறு நன்றாக மூடி, 1 வாரம் வரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, எடுத்து, பின் அதை வடிகட்டினால் பானம் ரெடி. 

பயன்படுத்தும் முறை 

இந்த ப்ளம்ஸ் பானத்தை நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 8 மணிக்குள் ஒரு டம்ளர் அளவு குடித்து வர வேண்டும். 

நன்மைகள் 

ப்ளம்ஸில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளதால், இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொண்டு உடல் எடையை குறைக்கிறது.

ப்ளம்ஸ் பழத்தில் உள்ள சத்துக்கள் நமது உடலைத் தாக்கும் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ப்ளம்ஸ் பழம் மட்டும் கலந்த இந்த பானத்தைக் குடிப்பதால், அதில் உள்ள உட்பொருட்கள், நமது உடம்பில் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.

நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சீராக்குவதால், நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்