உலகம் செய்திகள்

போர்ச்சுகல்லில் காட்டு தீ யில் சீக்கி 43 பேர் பலி

18 Jun 2017

போர்ச்சுகல் நாட்டில் ஏற்பட்ட திடீர் காட்டு தீயில், 4 பேர் உயிர் இழந்துள்ளனர். ஐரோப்பிய நாடான போர்ச்சுகல் நாட்டில் கடந்த சனிக்கிழமை கடுமையான வெயில் அடித்தது. காட்டு பகுதியில், 60 இடங்களில் திடீரென தீ பிடித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த தீ வேகமாக பரவியது. தீயை அணைக்கும் பணியில் 1,700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். லிரியா என்ற இடத்தில் கார்களில் பயணம் செய்த 43 பேர் உயிர் இழந்தனர். 59 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தீயில் இருந்து தப்பிக்க முயன்றவர்களா அல்லது செல்லும் வழியில் திடீரென காட்டு தீயில் சிக்கி கொண்டவர்களா என்பது தெரியவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்