இலங்கை செய்திகள்

போராட்டம் நடத்திவரும் கேப்­பா­ப்புலவு மக்­கள் தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கு மனு

16 Apr 2018

பூர்­வீக வாழ்­வி­டங்ளை விடு­விக்­கக் கோரி போராட்டம் நடத்திவரும் கேப்­பா­ப்புலவு மக்­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மற்றும், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு தங்­க­ளது கோரிக்­கை­கள் அடங்­கிய மனுவை நேற்­று கைய­ளித்­த­னர்.

இரா­ணு­வம் சுவீ­க­ரித்­துள்ள காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முத­லாம் திகதி ஆரம்­பித்த நில­மீட்பு போராட்­டம் ஓராண்­டைத் தாண்­டிய நிலை­யில் 414 ஆவது நாளாக நேற்­றும் இரா­ணுவ முகா­முக்கு முன்­னால் தொடர்ந்­தது.

104 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மான 181 ஏக்­கர் காணி­களை விடு­விக்­கும் வரை தமது போராட்­டம் தொட­ரு­மென தெரி­வித்து கேப்­பா­ப்பு­லவு மக்­கள் தொடர் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் மற்­றும் தமிழர­சுக் கட்­சித் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராசா, ஆகி­யோ­ருக்­கான மனுக்­களை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி சாந்தி சிறிஸ்­கந்­த­ரா­சா­வி­டம் கைய­ளித்­த­தோடு ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான மனுக்­க­ளும் அனுப்பி வைக்­கப்­பட்­டன.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் ஆகி­யோ­ருக்­கான மனுக்­களை மாகாண சபை உறுப்­பி­னர் ஆ.புவ­னேஸ்­வ­ர­னி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.

மக்­கள் பிர­தி­நி­தி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட மனு­வில், “கேப்­பா­ப்புலவு பூர்­விக வாழ்­விட வழித்­தோன்­றல் மக்­க­ளா­கிய நாம் எமது வாழ்­வி­டம் கோரி நீதி நியா­ய­மான உரி­மை­யான கோரிக்­கை­களை முன்­வைத்து தொடர் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்­தில் கால்­ப­தித்த போது தாங்­க­ளும் இயன்­ற­ளவு முயற்­சி­கள் எடுத்து ஒரு தொகுதி வாழ்­வி­டம் கிடைக்­கப் பங்கு கொண்­ட­மைக்­காக நாம் நன்­றி­க­ளைத் தெரி­வித்­துக் கொள்­கி­றோம்.

எமது கோரிக்­கைக்கு அர­சி­னால் இது­வரை சாத­க­மான முடி­வு­கள் கிடைக்­கப்­பெ­ற­வில்லை வீதி­யோ­ரத்தை வீடாக்கி சொல்ல முடி­யாத துன்ப துய­ரங்­க­ளைச் சுமந்து எமது பூர்­விக வாழ்­வி­டம் எமக்கு வேண்­டும் என்ற தள­ராத மன உறு­தி­யு­டன் 414 நாள்­க­ளாக தொடர் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்­தில் கால் பதித்து நிற்­கும் எமக்கு முடிவு என்ன?. மக்­கள் பிர­தி­நி­தி­க­ளான நீங்­கள் என்ன முடிவு சொல்­கி­றீர்­கள்?” என்­று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV