23 Jan 2023
வடமராட்சி உப்பு வல்லை சந்திப் பகுதியில் நேற்று இரவு (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குப்பிளான் வடக்கு குப்பிளானை சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, நெல்லியடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும், உதவி பரிசோகருமான ரத்நாயக்கா தலைமையில் குறித்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.