இலங்கை செய்திகள்

போதைப் பொருள் வர்த்தகர் கைது

13 Mar 2018

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய, போதைப் பொருள் வர்த்தகரான “பெரல் சங்க“ இன்று அதிகாலை பேஹலியகொட பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேஹலியகொட, மிரிஸ்வத்த பகுதியில் வைத்து பொலிஸ் விசேட படையணியால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது இவரிடமிருந்து, போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதாளக்குழு உறுப்பினர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தின் கசந்தேகநபரான இவர், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்