இலங்கை செய்திகள்

போக்குவரத்துச் சேவைகள் வழமைக்குத் திரும்பின

15 Apr 2019

நேற்றைய புத்தாண்டு சுபவேளை சம்பிரதாயங்களின் போது குறைவாக காணப்பட்ட அரச போக்குவரத்துச் சேவை தற்பொழுது படிப்படியாக சீரடைந்து வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

குறுகிய தூர மற்றும் நீண்ட தூரங்களுக்கான போக்குவரத்துச் சேவைகளுக்கு பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இ.போ.ச. மேலும் கூறியுள்ளது.

இதேவேளை, ரயில் சேவைகளும் வழமை போன்று செயற்படுவதாகவும் ரயில்வே போக்குவத்துக்கான பிரதிப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். பொல்வத்த தெரிவித்துள்ளார்.

நாட்டில் போக்குவரத்துச் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.  


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்