கனடா செய்திகள்

பொலிஸ் பிரிவிற்கான ஒதுக்கீடுகளை குறைப்பதற்கு ஒன்ராறியோ தீர்மானம்

14 May 2019

வரவு செலவுத் திட்டத்தில் மாகாண பொலிஸ் பிரிவிற்கான ஒதுக்கீடுகளை குறைப்பதற்கு ஒன்ராறியோ தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் இவ்வாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் 46 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தில் காணப்படும் பற்றாக் குறைகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் கொன்சவேற்றிவ் அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

இதேவேளை, சுகாதார ஆராய்ச்சி, சட்ட நிவாரணம், நூலக சேவை மற்றும் சுற்றுலாத்துறை அலுவலகங்கள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஒன்ராறியோ 11.7 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்