06 Aug 2022
பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் மற்றும் விற்பனை செய்வதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா IOC உடன் பல நிறுவனங்கள் இலங்கையில் பெற்றோலிய தொழிற்துறையில் ஈடுபடும் என அவர் மேலும் தெரிவித்தார்.