இலங்கை செய்திகள்

பொதுமக்கள் பொறுப்பானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் - கரு ஜயசூரிய

14 Feb 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுமக்கள் பொறுப்பானவர்களை தேர்ந்தெடுப்பார்களாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூடியதாய் இருக்கும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இன்னும் சில தினங்களில் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது. புதிய நாடாளுமன்றம் ஒன்று எதிர்வரும் மே மாதம் நியமிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை ​தேர்ந்தெடுக்கும் போது ´கௌரவ நாடாளுமன்ற உறுப்பினரே´ என்று அழைக்கக்கூடிய நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நாட்டை நேசிக்கும் புத்திஜீவிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் பல பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும்” எனக் கூறினார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்