இலங்கை செய்திகள்

பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளருக்கே ஆதரவு -பசில்

12 Feb 2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளரை மாத்திரமே தாம் ஆதரிப்பதாக, முன்னாள் அமைச்சரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரை பின்தள்ளி, தமது கட்சியல்லாத ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரல்லாத ஒருவரை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டனர். இந்நிலையிலேயே பசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்