இலங்கை செய்திகள்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக குமார வெல்கம

16 Apr 2019

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை வேட்பாளராக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது. இலங்கையின் ஆங்கில ஊடகமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியாத நிலைமை ஏற்படின், குமார வெல்கமவை வேட்பாளராக நிறுத்துவதற்கு பொதுஜன பெரமுனவில் ஆராயப்பட்டு வருகின்றது.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாராயின் பொதுஜன பெரமுன, தனித்து போட்டியிட வேண்டுமென அதன் உறுப்பினர்களில் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே பொது வேட்பாளராக குமார வெல்கமவை நிறுத்த வேண்டுமென பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களில் பெரும்பாலனோர் வலியுறுத்தியுள்ளனர்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்