வாழ்வியல் செய்திகள்

பொடுகு தொந்தரவா முதலில் இதனை செய்யுங்கள்

16 May 2019

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முடி பிரச்சினைகள் அதிகம் வந்து கொண்டே இருக்கின்றது.  இதன் காரணம் நம் தலைமுறையில் உள்ள தலையலசும் முறை தான். தலையில் மயிர்க்கால்கள் 5 மி.மீட்டர் அளவு உள்ளே வேர் ஊன்றியிருந்தால் அது ஆரோக்கியமான முடி வளர்ச்சி ஆகும்.  ஆனால் இப்போது 1 மி.மீ அளவுதான் உள்ளே வேர் ஊன்றி உள்ளது.

 

சாதரணமாக வாகனத்தில் வேகமாக சென்றாலே முடி கொட்டி விடுகின்றது. பெண்களுக்கு வறண்ட கூந்தல் ஏற்பட்டு பொடுகு வந்து விடுகின்றது. பொடுகு என்பது தலையில் மேல் தோல் காய்ந்து பெயர்ந்து விடுவதே.  இந்த மேல் தோல்களில் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் இருக்கும்.  தலையில் ஈரப்பதம் போதுமான அளவு இல்லாததால் தான் இந்த பிரச்சினைகள் வருகின்றது.

 

எப்படி மரத்தை சுற்றியுள்ள மண் அரிப்பு ஏற்பட்டு கரைந்து போனதும் மரம் வலுவிழக்கின்றதோ அதே போல் தான் பொடுகும்.  பொடுகு ஏற்பட்டால் முடி வலுவிழந்துவிடும்.  இந்த பொடுகை சரிசெய்ய வழிகள்.

 

பொடுகு நீங்க முதலில் தலையில் ஈரப்பதம் வேண்டும். ஈரப்பதம் வந்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும். இதற்கு பழைய பொடுகு தோலை முதலில் அகற்ற வேண்டும்.  சீயக்காய் அல்லது அரைப்பு கொண்டு தலைக் குளித்து விடவேண்டும்.  பின்னர் விளக்கெண்ணெய் கொண்டு விரலில் தொட்டு மண்டையோட்டில் படுமாறு விரலில் அழுத்தி தேய்க்க வேண்டும்.

 

இவ்வாறு தேய்க்கும் போது மயிர்க்கால்களுக்கு விளக்கெண்ணெய் சென்றுவிடும் ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு.  கற்றாலையை வெட்டி அதை தலையில் மண்டையோட்டில் படுமாறு தேய்க்க வேண்டும். இப்போது தலையை சீய்க்காய் மற்றும் வடித்த கஞ்சி சேர்த்து நன்றாக பிசைந்து தலையில் தேய்த்து அலசிவிடவும்.

 

இப்போது தலையில் பிசு பிசு தன்மை வந்துவிடும் இது மூன்று நாட்கள் வரை இருக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இதை செய்யவும். பொடுகு வராது முடி செழித்து வளரும்.

 

பேன் மற்றும் பொடுகு தொந்தரவு ரொம்பவே உள்ளவர்கள் வேப்பிலையை பறித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பின் பாத்திரத்தை ஆறவைத்து இந்த தண்ணீரை தலையில் தேய்க்கவும் ஒரு மணிநேரம் காயவிட்டு பின் சீயக்காய் போட்டு குளிக்கவும். வாரத்திற்கு இருமுறை செய்தால் முடி உதிர்தல், இளநரை, பேன், ஈறு, பொடுகு போன்றவை நின்று முடி செழித்து வளரும்.

 

தினமும் தலைக்கு குளிக்க கூடாது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தினமும் தலைக்கு குளிக்காமல் வாரத்திற்கு இருநாள் குளிக்க வேண்டும்.  ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டாம். ஹேர் ஃபர்ஃபியூம், ஹேர் டை, ஹேர் ஜெல் ஆகியவை முடிக்கு கேடு விளைவிக்கும்.  மயிர்க்கால்கள் தான் முடிக்கு பலம்.

 

தலையை விரித்துக் கொண்டு செல்லக்கூடாது. பின்னல் போட்டு விட வேண்டும். ஆண்கள் தலையில் வர்ணம் அடிக்கக் கூடாது.  தினமும் தலையில் தேங்காய் எண்ணைய் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்த கலவையை தலையில் கொஞ்சமாவது தேய்க்கவேண்டும். எந்த அளவுக்கு ஊன்றியுள்ளதோ அந்த அளவுக்கு முடி ஆரோக்கியமாக வளரும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்