சினிமா செய்திகள்

பொங்கலுக்கு சிறப்பு விருந்தளிக்கும் தனுஷ்

12 Jan 2018

இயக்குனர் கவுதம் மேனன் தற்போது தனுஷை வைத்து `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். கவுதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்ட்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இசையமைப்பாளர் யார் என்று வெளியிடாமலே இப்படத்தில் இடம் பெறும் "மறுவார்த்தை பேசாதே" என்ற பாடல் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியான ‘நான் பிழைப்பேனா...’ என்ற பாடலும் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது.

பின்னர் இப்படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா என்று அதிகாரப்பூர்வமாக கவுதம் மேனன் அறிவித்தார். புத்தாண்டை முன்னிட்டு, ‘விசிறி..’ என்ற பாடலை வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்ததாக ‘கூவை’ என்ற பாடலை பொங்கல் தினத்தை முன்னிட்டு 14ம் தேதி வெளியிட இருக்கிறார் கவுதம் மேனன்.

கூவை என்பதற்கு ஆந்தை என்று பொருள். ஆக்கங் கெட்ட கூவை என்று ஒருவரை திட்டுவதற்கு உபயோகப்படும் வார்த்தை. இதில் கூவை என்ற வார்த்தையை வைத்து இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள்.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV