இலங்கை செய்திகள்

பைகள், பாதணிகளின் விலைகள் குறையும்

24 May 2023

எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் பாடசாலை பைகள் மற்றும் பாதணி உற்பத்திகளின் விலையை 10 வீதத்தால் குறைக்க உள்நாட்டு உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலரின் பெறுமதி குறைவடைந்ததை தொடர்ந்து அமைச்சரால் விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து உள்நாட்டு உற்பத்தியாளர்கள் குறித்த சலுகையை வழங்க தீர்மானித்துள்ளனர்.

அதற்கேற்ப பாடசாலை பை மற்றும் பாதணிகளின் விலை ரூ. 350 தொடக்கம் ரூ.450 வரை விலை குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam