இலங்கை செய்திகள்

பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரைப் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு

16 Apr 2018

மன்னார் -  பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரைப் பகுதியில் நேற்று பேசலை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து ஒரு தொகுதி மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளனர். 

பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரைப் பகுதியில் பருவ கால மீன்பிடித் தொழிலை வங்காலை மற்றும் தாழ்வுபாடு மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தாழ்வுபாடு மீனவர்கள் குறித்த பகுதியில் வாடி அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் மீனவர் ஒருவர் கடந்த 13 ஆம் திகதி குறித்த கடற்கரை பகுதியில் குழி தோண்டிய போது இரும்புப் பெட்டியை அவதானித்து அருகிலுள்ள கடற்படையினரிடம் தெரிவித்து பின்னர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். 

இதனையடுத்து குறித்த இடத்தில் பொலிஸார் பாதுகாப்பை மேற்கொண்டதுடன் நேற்று  விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வெடிபொருட்களை மீட்டனர். 

இதன் போது குறித்த குழியில் இருந்து 81 ரக மோட்டார் குண்டுகள் 15, மற்றும் 61.ரக மோட்டார் குண்டு 1 என்பன மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட குண்டுகள் பேசாலை பொலிஸாரால் கட்டுப் பகுதியில் வைத்து செயழிலக்கச் செய்யப்பட்டன.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV