இலங்கை செய்திகள்

பொதுத்­தேர்தலை நடத்­த மஹிந்த கனவு கண்­டாலும் நடக்­காது - ராஜித சேனா­ரத்ன

13 Feb 2018

பிர­த­ம­ரா­கவோ அல்­லது பொதுத்­தேர்தல் ஒன்றை நடத்­து­வ­தற்கோ முன்னாள் ஜனா­தி­பதி கனவு கண்­டு­கொண்­டி­ருந்­த­போதும்  இடம்­பெ­றப்­போ­வ­தில்லை

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு 2015 ஜன­வரி 8 ஆம் திகதி ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது கிடைக்­கப்­பெற்ற மக்கள் ஆணை உள்­ளூ­ராட்­சி ­மன்ற தேர்­தலில் மேலும் உறு­தி­யா­கி­யுள்­ளது. அத்­துடன் பிர­த­மரை மாற்­றவோ அல்­லது அர­சாங்கம் ராஜி­னா­மா­ செய்­யவோ எந்­த­தே­வையும் வெளிப்­ப­ட­வில்லை என சுகா­தார அமைச்­சரும் அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

உள்­ளூ­ராட்­சி­ மன்ற தேர்தல் பெறு­பே­றுகள் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,”நடந்து முடிந்த தேர்­தலில் வெளி­வந்­தி­ருக்கும் பெறு­பே­று­களின் பிர­காரம் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­விற்கு அளிக்­கப்­பட்ட மொத்த வாக்­கு­களில் 45 வீத­மான வாக்­கு­களே கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அது ஜன­வரி 8ஆம் திகதி முன்னாள் ஜனா­தி­பதி பெற்­றுக்­கொண்ட வாக்கு வீதத்­தை­விட குறை­வான வாக்­கு­வீ­த­மாகும். இந்த பெறு­பே­று­களின் பிர­காரம் நாட்டின் பெரும்­பான்­மை­யான வாக்­கா­ளர்கள் தங்கள் வாக்­கு­களை மொட்டு சின்­னத்தில் போட்­டி­யிட்ட பொது­ஜன பெர­மு­ன­விற்கு எதி­ரா­கவே அளித்­துள்­ளமை தெளி­வா­கின்­றது.

மேலும் தேர்தல் பெறு­பே­றுகள் தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யா­டினேன். அர­சாங்­கத்தின் குறை­பா­டு­களை நிவர்த்தி செய்­து­கொண்டு முன் செல்ல இரண்­டு­பேரும் இணக்கம் தெரி­வித்­தனர். உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் வெற்­றி ­பெற்று நாட்டின் பிர­த­ம­ரா­கவோ அல்­லது பொதுத்­தேர்தல் ஒன்றை நடத்­து­வ­தற்கோ முன்னாள் ஜனா­தி­பதி கனவு கண்­டு­கொண்­டி­ருந்­த­போதும் அது இடம்­பெ­றப்­போ­வ­தில்லை. முன்னாள் ஜனா­தி­ப­திக்கு பிர­தமர் பதவி வழங்க ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியோ ஐக்­கிய தேசிய கட்­சியோ இது­வரை முன்­மொ­ழி­ய­வில்லை.

2015ஆம் ஆண்டு ஊழல் மற்றும் மோச­டி­களை ஒழிப்­ப­தற்கே ஆளும் அர­சாங்­கத்­துக்கு மக்கள் ஆணை கிடைக்­கப்­பெற்­றது. அதனை தொடர்ந்து முன்­னுக்கு கொண்­டு­செல்ல நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தலை­வர்கள் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்­ளனர்.

இந்த தேர்­தலில் பேரு­வளை தொகுதி தோல்­வி­ய­டைந்­த­துடன் என்னை கண்டு பிடிக்க முடி­யாமல் இருப்­ப­தாக நாடாளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது தெரி­வித்­துள்ளார். டலஸ் அழ­கப்­பெ­ரு­ம­வைப்­போன்று நான் அமெ­ரிக்­கா­விற்கு தப்­பிச்­செல்­ல­வில்லை. வீட்டில்தான் இருக்கின்றேன் என்பதை அவருக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

அத்துடன் மக்கள் ஆணையின் பிரகாரம் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் போராட்டத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பேன். அதேபோன்று 2020இற்கு  பிறகு ஜனாதிபதியை மீண்டும் நியமிக்கவும் நடவடிக்கை எடுப்பேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV