விளையாட்டு செய்திகள்

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா புதிய சாதனை

10 Oct 2019

பிரிஸ்பேனில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 196 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலியா 26.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அலிசா ஹீலே 112 ரன்கள் (76 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்) நொறுக்கினார். தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பெண்கள் சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக ருசித்த 18-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் தொடர்ந்து அதிக ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த தங்களது முந்தைய சாதனையை (1997-1999-ம் ஆண்டுகளில் தொடர்ந்து 17 வெற்றி) ஆஸ்திரேலியா முறியடித்தது.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்