இலங்கை செய்திகள்

பூநகரியில் வீடு ஒன்றிற்குள் புகுந்த இரு இராணுவத்தினர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு

13 Sep 2018

பூநகரி கரியாலை நாகபடுவன் கணேஸ் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு செய்த  இராணுத்தினரை மக்கள் மடக்கிப்பிடித்ததுள்ளனர்.

இன்று அதிகாலை வீடு ஒன்றினுள் புகுந்த இராணுவத்தினரை கண்டு அச்சத்தில் சத்தமிட்ட வீட்டு உரிமையளர்களின் அலறலைக் கேட்ட அயலவர்கள் குறித்த இரு இராணுவத்தினரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இராணுவத்தினர் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுவந்துள்ள நிலையில்,  சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் போது, ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு கூறப்பட்ட நிலையில் இன்று பொதுமக்கள் ஆதாரத்துடன் இரு இராணுவ வீரர்களையும் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மக்கள் குடியிருப்புக்குள் இரணுவமுகாம் இருப்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்ற நிலையில், இவ்வாறான சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் மேலும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்