இலங்கை செய்திகள்

புத்தாண்டிலும் தாம் வீதியில் நிற்பதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவிப்பு

14 Apr 2019

தமது பூர்வீக நிலங்களில் இராணுவத்தினர் புதுவருடத்தைக் கொண்டாடும் வேளையில், தாம் வீதியில் வாழ்வதாக கேப்பாப்புலவில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஓவ்வொரு புதுவருடத்திலும் தமது வீடுகளுக்குச் செல்வோம் என காத்திருந்து தற்போது 10 வருடங்களாக தாம் வீதியிலேயே காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேப்பாப்புலவில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை 774ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புது வருடத்திலும் புத்தாண்டை கொண்டாட முடியாது தெருவில் நிற்கும் துர்பாக்கிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தமது குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழ் தலைமைகள் வாக்கு கேட்டு தமது பகுதிகளுக்கு வரவேண்டாமென்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்