இலங்கை செய்திகள்

புத்தளத்தில் 350 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் அழிப்பு

13 Mar 2018

புத்தளம் மேல்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த வழக்கு விசாரணைகளுக்கு அமைவாக, 35 கிலோகிராம் ஹெரோய்ன், 2 கிலோகிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புத்தளம் மேல்நீதிமன்ற வளாகத்தில் வைத்து நேற்று அழிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மேல்நீதிமன்ற நீதிபதியின்  உத்தரவுக்கமைய,  அவை அழிக்கப்பட்டுள்ளன.

2010ஆம் ஆண்டு கீரியன்கல்லிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 3 சந்தேகநபர்களிடமிருந்து இந்த போதைப்பொருளை கைப்பற்றியதாகவும், இதன்பெறுமதி 350 மில்லியன் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்