தொழில்நுட்பம் செய்திகள்

புதிய வகை சூட்கேஸ் ஸ்கூட்டர்கள்!

22 Dec 2021

பொய்மோ (POIMO) என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த ஸ்கூட்டரை, டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹிரோகி சட்டோ என்பவர் உருவாக்கியுள்ளார்.

சூட்கேஸ் சைசில் உள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை, எளிதாக எங்கு வேண்டுமானாலும் கைகளிலேயே தூக்கிச் செல்லலாம். தேவைப்படும் இடத்தில் பலூனுக்கு காற்றடைப்பது போல் அடைத்து பயன்படுத்தலாம்.

தற்போதைக்கு மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில், இந்த சூட்கேஸ் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்து.

நகரத்தை சுற்றி குறுகிய பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட Poimo, விரும்பும் எந்த இடத்திலும் ஏறவும் இறங்கவும் அனுமதிக்கும் வகையில், பயனரின் பையில் சுற்றி, மடிக்கப்பட்டு, எடுத்துச் செல்லும் அளவுக்கு இலகுவாக உள்ளது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam