கனடா செய்திகள்

புதிய மருந்து விலைகள் நடைமுறைக்கு வரவுள்ளன

10 Aug 2019

புதிய மருந்து விலைகளை மதிப்பிடும் விதத்தில் மத்திய அரசு, பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது.இந்த மாற்றமானது, எதிர்வரும் 10 ஆண்டுகளில் கனேடியர்களின் பில்லியன்களை மிச்சப்படுத்தும் என்று மத்திய அரசு நம்புகின்றது.

1987ஆம் ஆண்டில் முதன்முதலில் அமைக்கப்பட்ட காப்புரிமை பெற்ற மருத்துவ விலைகள் மறுஆய்வு செய்த மாற்றங்களை சபையில் மத்திய அரசு, வெளியிட்டது. இதில், ‘அதிகப்படியான விலைகள்’ என்பதை எதிர்த்து அரசாங்கம் இந்த மாற்றங்களை வெளியிட்டது. இதற்கமைய எதிர்வரும் ஆண்டு ஜூலை மாதம், புதிய மருந்து விலைகள் நடைமுறைக்கு வரவுள்ளன.

இதேவேளை, கனடாவில் காப்புரிமை பெற்ற மருந்துகளின் பட்டியல் விலைகள் இப்போது உலகிலேயே மிக உயர்ந்தவை என ஹெல்த் கனடாவிலிருந்து வெளியான குறிப்பு குறிப்பிடுகிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்