சினிமா செய்திகள்

புதிய கெட்டபுக்கு மாறும் அஜித்

16 May 2018

 

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அஜித் புதிய கெட்-அப்புக்கு மாறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு  துவங்கியதில் இருந்தே விஸ்வாசம் படம் குறித்து பல தகவல்களும், புகைப்படங்களும் வெளியாகிய வண்ணமாக உள்ளன.

படக்குழுவினர் அனைவருமே அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அஜித் இந்த படத்தில் இரண்டு கெட்-அப்புகளில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இளைஞராகவும், வயதான தோற்றத்திலும் வருகிறாராம். முதலில் வயதான தோற்றத்துக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதன் பிறகு இளமை தோற்றத்துக்கு அஜித் மாற இருக்கிறாராம். தாடியை முழுமையாக எடுத்து கருப்பு முடியுடன் இளமை தோற்றத்தில் அஜித் வருவார் என்று கூறப்படுகிறது. மேலும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கிலும் ஒரு சில காட்சிகளில் வருகிறாராம்.

சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ்திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்