இலங்கை செய்திகள்

புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவளிப்பவர்கள் தேசத் துரோகிகள் - மெதகொட அபேதிஸ்ஸ தேரர்

12 Jan 2019

தற்போதைய அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் அதிகாரம் வழங்கவில்லை என்று பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

உத்தேச புதிய அரசியலமைப்பின் ஊடாக மத்திய அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். நேற்றைய தினம்  ஊடகவியலாளர்களின் ​கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

இவ்வாறான புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் தேசத் துரோகிகளாகவே கருதப்படுவார்கள் என்று பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்