இலங்கை செய்திகள்

புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளின் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது

12 Aug 2017

புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளின் வேலை நிறுத்தம் சற்று முன்னர் நிறைவுக்கு வந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களின் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளே இவ்வாறு பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளின் ஓய்வு அறைகள் உள்ளிட்ட சில இடங்களில் இருக்கின்ற மூட்டைப்பூச்சிகள் தொடர்பாக சரியான தீர்வு ஒன்று கிடைக்காததன் காரணமாக அவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட நேரப் பகுதியில் எந்தப் புகையிரதங்களையும் இரத்து செய்யும் அவசியம் ஏற்படவில்லை என்றும், ஒரு புகையிரதம் மட்டும் தாமதமானதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV