வாழ்வியல் செய்திகள்

புகைப்பழக்கம் முதியவர்களிடையே பல்வேறு நோய்களை அதிகரிக்கிறது

18 Mar 2017

புகைப்பழக்கம் முதியவர்களிடையே பல்வேறு நோய்களை அதிகரிக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மூன்று தனியார் கல்வி நிறுவனங்கள் இந்த ஆய்வை மேற்கொண்டன. தொற்று நோயல்லாத நோய்களில் அதிகளவில் முதியவர்களுக்கு தொல்லைத் தருவது இந்தப் புகைப்பழக்கம் என்று இந்த ஆய்வு சொல்கிறது.

இந்த ஆய்வில் வெளியாகிய மற்றொரு தகவல் என்னவெனில், கேரளாவில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இருதய நோய்களும் அதிகளவில் காணப்படுகிறது என்பதாகும். புகைப்பழக்கமற்றவர்களை விட ஒருமுறையேனும் புகைப்பழகத்தினை கொண்டிருந்தவர்களே கடுமையான தொற்று நோய் அல்லாத நோய்த் தொற்றி ஓராண்டிற்குள் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

இந்த ஆய்வின் தலைவரான டாக்டர் கே ஆர் தங்கப்பன் புகையிலைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமே பல்வேறு நோய்களால் வயதான காலத்தில் அவதிப்படுவதைத் தடுக்க முடியும் என்று கூறியுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் புகையிலையினால் கேரள மாநிலத்திற்கு ஏற்படும் பொருளாதார இழப்பு ரூ.1514 கோடி என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆகையால் புகைப்பழக்கத்திற்கும் வயதான காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய்த் தொல்லைகளுக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. கேரளா மட்டுமின்றி தமிழ் நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்