இந்தியா செய்திகள்

பீகார்: உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 12 பேர் பணியிடை நீக்கம்

28 Oct 2017

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பீகார் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு சட்டத்தை அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் ரோடாஸ் மாவட்டம் தன்வார்கிராமத்தை சேர்ந்த சிலர் கள்ளச்சாரயம் குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 5 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

இதனையடுத்து 5 போலீஸ் அதிகாரிகள் உட்பட 12 போலீசார் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டது. மேலும் கள்ளச்சாராயம்   விற்றது தொடர்பாக 2 சாராய வியாபரிகளையும் கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV