இந்தியா செய்திகள்

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருடன் அமித் ஷா சந்திப்பு

12 Jul 2018

பீகாரில் பாரதீய ஜனதா ஆதரவுடன் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. சமீப காலமாக  பாஜக மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இடையில் கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில்,  இன்று காலை மாநில முதல்வர் நிதிஷ் குமாரை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்து பேசினார்.

விருந்தினர் மாளிகையில், நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அமித்ஷாவுக்கு காலை உணவு விருந்தும்  அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, அமித்ஷாவுடன் பீகார் பாஜக தலைவர்களும் உடன் இருந்தனர். இன்று இரவு மீண்டும் இரு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். அப்போது, 2019  பாராளுமன்ற தேர்தல்  உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து  இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்