இலங்கை செய்திகள்

பிள்ளையான் இன்றுடன் 1.000 நாட்களை சிறையில் கழிக்கின்றார்

11 Jul 2018

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) 1,000 நாள்களைச் சிறையில் கழித்துள்ளாரென, அவரது கட்சியான  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று 11ம் திகதி புதன்கிழமையுடன் தொடர்ச்சியாக ஆயிரம் நாட்களை விளக்கமறியல் நீடிப்பின்போது, அவர் கழித்துள்ளார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்குச் சென்றிருந்த போது, 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியன்று, அவர் கைது செய்யப்பட்டார்.

 அவர் மீதான விளக்கமறியலில் நீதிமன்றத்தால் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே, இன்றுடன் 1,000 நாள்களை அவர் சிறையில் கழித்துள்ளார்.  






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV