கனடா செய்திகள்

பில்லி பிஷொப் விமான நிலையத்தில் படகில் பயணிப்பவர்களிற்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு

13 Mar 2018

ரொறொன்ரோ பில்லி பிஷொப் விமான நிலையத்தில் படகில் பயணிப்பவர்களிற்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு திரையிடலை பில்லி பிஷொப் விமானநிலையம் ஆரம்பித்துள்ளது. இந்த திரையிடல் நடவடிக்கை திங்கள்கிழமையில் இருந்த ஆரம்பமாகின்றது.

உள்நாட்டு நீர்வழிப்பாதை பாதுகாப்பு ஒழுங்கு விதி முறைகளிற்கு அமைய  பாதுகாப்பு கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக அமைவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடி பொருட்கள் குறித்த தேடுதலிற்காக சீரற்ற பொதி சோதனைகள் இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

படகில் ஏறுவதற்கு முன்னராக பயணிகள் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் அணுகப்படுவர்.

பில்லி பிஷொப்பை சென்றடைய படகு மட்டும் ஒரு வழியில்லை. பயணிகள் பாதசாரி சுரங்க பாதையையும் உபயோகிக்கலாம். இப்பாதை பாத்றஸ்ட் வீதியின் அடிவாரத்தில் விமான நிலையத்துடன் சேர்கின்றது.

பாதசாரி நடை பாதை வழியிலிருந்தும் பாதுகாப்பு திரையிடல் இடம்பெறுமா என்பது தெரியவரவில்லை.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்