இலங்கை செய்திகள்

பிரிந்து செல்வது எமக்கே பாதகமாக அமையும் - விக்னேஸ்வரன்

12 Jul 2017

“நாம் அரசியல் ரீதியாக முக்கிய கட்டத்தில் இருக்கும்போது தனிப்பட்ட குரோதங்கள், முரண்பாடுகளால் பிரிந்து செல்வது எமக்கே பாதகமாக அமையும்”  என வட.மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கேன்ஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் பிரிவினைக்கு இடமளிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை ஏற்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் பேசப்பட்டுவருகின்ற நிலையில் இது தொடர்பில் முதலமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அதேவேளை, தமிழ்மக்களின் மாற்றுத் தலைமைக்கான கோரிக்கை உங்களிடம் விடுக்கப்பட்டால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அத்தகைய கோரிக்கை முன்வைக்கப்படும் போது பார்த்துக் கொள்ளலாம் என முதலமைச்சர் கூறினார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்