இலங்கை செய்திகள்

பிரித்தானிய ரக்பி குழுவைச் சேர்ந்த மற்றுமொரு வீரரும் உயிரிழப்பு

16 May 2018

நட்புறவு ரக்பி போட்டியில் பங்கேற்பதற்காக, இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய ரக்பி குழுவைச் சேர்ந்த வீரரொருவர் மரணமடைந்த நிலையில், மற்றுமொரு வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் நேற்று உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதியன்று 22 பேர் உள்ளடங்கலாக இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய ரக்பி ​அணியினர், கொழும்பு - கோட்டையிலுள்ள விடுதியியொன்றில் தங்கவைக்கப்பட்டனர்.

கடந்த 12 ஆம் திகதி கொழும்பிலுள்ள மைதானமொன்றில் நட்புறவு ரக்பி போட்டியொன்றும் இடம்பெற்றது. அன்றைய தினம் இரவு வேளையில் விருந்துபசார நிகழ்வொன்றும் இடம்பெற்ற நிலையில், குறித்த அணியில் இரு வீரர்களும் மறுநாள் அதிகாலை 4 மணியளவிலேயே விடுதிக்கு திரும்பியுள்ளனர்.

அன்று காலை 10 மணியளவில் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  ஒருவர் உயிரிழந்தமையை தொடர்ந்து, நேற்று  நண்பகல் 12 மணிக்கு மற்றைய வீரரரும் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்