உலகம் செய்திகள்

பிரித்தானிய காவல் துறையின் புதிய அதிரடி முயற்சி!

16 Jul 2017

பிரித்தானியாவில் டிரோன் எனப்படும் ஆளில்லா விமான காவல் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இது காணாமல்போனவர்கள், சாலைவிபத்துகள் உள்ளிட்ட பெரிய குற்றச்சம்பவங்களை புலனாய்வதற்கு உதவும் என்று பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த முதலாவது ஆளில்லா விமானப்படை பிரிவை பிரித்தானியாவின் இரண்டு காவல்துறை சரகங்கள் உருவாக்கியுள்ளன.

இது காவல்துறைக்கு பல பத்தாயிரம் ஸ்டெர்லிங் பவுண்ட்களை சேமிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆளில்லா விமானங்கள் 24-மணி நேரமும் செயற்படும் என்றும் ஹெலிகாப்டர் செய்யும் அனைத்தையும் இது செய்யும் என்றும் அதிலுள்ள நுட்பமான காமெராக்கள் பலதையும் வேகமாக செய்யவல்லவை பெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிசார் ஒருவர் கூறுகையில், ஒரு விபத்து நடந்ததாக தகவல் கிடைத்ததும் காரில் செல்லும்போதே ட்ரோனை சம்பவ இடத்து எடுத்துச்சென்று உடனடியாக செயற்படச்செய்யமுடியும் என்றும் அதன் பின் ஹெலிகாப்டரின் உதவியை நாடலாம் என்று கூறியுள்ளார்.

முன்பு ஹெலிகாப்டர்களால் மட்டுமே செய்யமுடிந்த இத்தகைய செயல்களை இப்போது டிரோன்கள் செய்கின்றன. ஹெலிகாப்டர்கள் செயற்பட மணிக்கு ஆயிரம் டாலர் செலவாகும். ஆனால் டிரோன்களுக்கு ஆன செலவு குறைவு.

காணாமல்போனவரை தேடுவது, குற்றம் நடந்த இடத்தை ஆராய்வது, சாலை விபத்து முதல் இயற்கை பேரழிவுவரை பல இடங்களை படம்பிடிக்க ஆளில்லா விமானங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

டிரோன் படம்பிடிக்கும் காட்சிகளை காவல்துறையின் மத்திய கண்காணிப்பு அறைகளுக்கே நேரலையாக அனுப்பும் வசதியும் விரைவில் வரும் எனவும் கூறப்படுகிறது.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்