கனடா செய்திகள்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 17 குதிரைகள் சுட்டுக் கொலை

15 Mar 2023

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 17 குதிரைகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலாமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இரக்கமற்ற செயல் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் கம்லூப்ஸ் பகுதியிலேயே 17 குதிரைகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பொலிசார் அளித்த தகவலின் அடிப்படையில் தடயவியல் அடையாளப் பிரிவினர் சம்பவ இடத்தில் நுட்பமாக ஆய்வு செய்துள்ளனர். அத்துடன் கால்நடை மருத்துவர்களும் சம்பவ இடத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்தப் பகுதியில் அடிக்கடி காணப்படும் காட்டுக் குதிரைகளின் கூட்டத்திலிருந்து இந்த குதிரைகள் வழிதவறியதாக இருக்கலாம் எனவும், ஆனால் 17 குதிரைகளை கொலை செய்தது யார் அல்லது ஏன் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam