கனடா செய்திகள்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 37,000 இற்கும் அதிகமானவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

18 Jul 2017

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கட்டுக்கடங்காது தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயினால் இதுவரை 37,000இற்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது 160இற்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ எரிந்து வரும் நிலையில், தொடர்ந்தும் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீயின் பரவலை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், பொதுமக்களையும், அவர்களது பெறுமதியான சொத்துக்களையும் முடிந்த வரை பாதுகாப்பதில் அதிகாரிகள் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், இருந்த போதிலும் இதனையும் விடவும் மோசமான சூழ்நிலை ஏற்படக்கூடும் என மாநில போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 415 பேர் உட்பட, 2,895 தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 1,361,737 ஹெக்டேயருக்கும் அதிகமான பரப்பளவு காட்டுத்தீக்கு இரையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV