கனடா செய்திகள்

பிராம்ப்டன் முதியோருக்கு $15 மாதாந்த பிரஸ்டோ பாஸ்

09 Aug 2019

பிராம்ப்டன் டிரான்சிட் செப்டம்பர் மாதம் முதல் முதியோருக்குக்கு சிறப்பு $ 15 மாதாந்த பிரஸ்டோ பாஸை அறிமுகப்படுத்துகிறது.

புதிய தள்ளுபடி செய்யப்பட்ட பாஸ்கள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிராம்ப்டன் டிரான்சிட் டெர்மினல்களில் விற்பனைக்கு வரும், ஆனால் செப்டம்பர் 1 வரை இதனை பயன்படுத்தக்கூடியதாக இருக்காது என்று நகரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து பிராம்ப்டன் குடியிருப்பாளர்களும் தள்ளுபடி செய்யப்பட்ட இந்த சலுகையை பெற தகுதியுடையவர்கள். புதிய தள்ளுபடி முதியோர்களின் பாஸ்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போதுள்ள வயது வந்தோர் மற்றும் குழந்தை கட்டணம் மற்றும் பாஸ்களில் எந்த வித மாற்றமும் இல்லை.

2022 ஆம் ஆண்டில் பிராம்ப்டன் கவுன்சில் காலத்தின் முடிவில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.


'எமது முதியோரை விட இலவச போக்குவரத்துக்கு தொடங்குவதற்கு யார் பொருத்தமானவர்? அவர்கள் தான் எங்கள் சமூகத்தை கட்டியெழுப்பியுள்ளனர், என்று மேயர் பட்ரிக் பிரவுன் மார்ச் மாதம் கூறினார், இந்த சலுகையை சேர்ப்பது, முதியோர்களுக்கு போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக்குவதற்கான செயல்பாட்டின் முதல் படியாகும்.

மேயர் பட்ரிக் பிரவுன் மற்றும் சபை உறுப்பினர்கள் கடந்த ஜூலை 5 ம் தேதி காலை 10:45 மணிக்கு பிராம்ப்டன் நகர முதியோர் மையத்தில் இந்த முயற்சியை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு நிகழ்வை நடத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்