கனடா செய்திகள்

பிரம்ப்டனில் இரு தமிழர்கள் கைது

19 Mar 2023

 ரொறன்ரோவில் துப்பாக்கிகள் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணையின் ஒரு பகுதியாக தேடப்படும் இரண்டு நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

ஜூன் 7, 2022 அன்று லோயர் சிம்கோ ஸ்ட்ரீட் மற்றும் ப்ரெம்னர் பவுல்வர்ட் பகுதியில் அதிகாரிகள் ஈடுபட்ட விசாரணையுடன் இந்த அழைப்பு தொடர்புடையது என்று ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விசாரணை நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரம்ப்டனில் இரு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 29 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் மற்றும் 30 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் ஆகியோர் குற்றத்தின் மூலம் பெறப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக தலா மூன்று குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மேலும் இருவரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ரொறன்ரோவைச் சேர்ந்த 36 வயதான ஜஹ்மல் பால்மர் மற்றும் பால் வில்லியம்ஸால் அறியப்படும் பால் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரும் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர். இதன்படி இரண்டு முக்கிய சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam