கனடா செய்திகள்

பிரம்டன் நகரில் மூதாட்டியின் மரணத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

14 May 2019

ரொறன்ரோவின் பிரம்டன் நகரில் மூதாட்டியின் மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரம்டன் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 82 வயது மூதாட்டி ஒருவரது சடலம் நேற்று திங்கட்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. கடும் காயங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார் குறித்த பகுதியை சேர்ந்த 81 வயதுடைய ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

கொலைக்குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அவர் நேற்று மாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்