கனடா செய்திகள்

பிரம்டனில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்ட பாதசாரி ஒருவர் உயிரிழப்பு

10 Oct 2019

பிரம்டனில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதசாரி ஒருவர், சிகிச்சைகள் பலனின்றி அங்கு உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Steeles Avenue மற்றும் Hurontario Street பகுதியில் நேற்று இரவு குறித்த அந்த பாதசாரி வாகனத்தினால் மோதுண்டதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உடனடியாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைகள் பலனின்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார், விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்