உலகம் செய்திகள்

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

11 Oct 2017

ஹார்வி வெய்ன்ஸ்டீன், ஒரு இளம் மாடலை பாலியல் ரீதியாக தனது ஹோட்டல் அறைக்கு அழைக்கும் ஆடியோ ஒன்று வெளியானது, ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியது. அதன் பின்னர் நடிகைகள் சிலர் தாங்களும் இதே போன்று  ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாதிக்கபட்டதாக தெரிவித்தனர்.

தற்போது அந்த வரிசையில் ஹாலிவுட் பிரபல நடிகைகளான பால்ட்ரோ மற்றும் ஏஞ்சலீனா ஜூலி  ஆகியோரும் அவர் மீது அதே குற்றசாட்டினை வைத்துள்ளனர். பிரபல அமெரிக்க நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர்கள் இதனை தெரிவித்து உள்ளனர்.

 பால்ட்ரோ, ’எனது 22 வயத்தில் வெய்ன்ஸ்டீன் தயாரிக்கும் படத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு தனது ஹோட்டலுக்கு என்னை அழைத்தார். எல்லா நடிகைகளிடமும் அவர் அப்படி தான் நடந்துகொள்வார்” என்றார்.

இது குறித்து அவர் தனது அப்போதைய காதலனும் பிரபல ஹாலிவுட் நடிகருமான பிராட் பிட்டிடம் கூறியாதாகவும், அவர் வெயின்ஸ்டெயினை கண்டித்த பிறகு, வெயின்ஸ்டெயின், நடந்ததை வேறு யாரிடமும் கூறகூடாது என மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

அதே போன்று பிரபல நடிகை, ஏஞ்சலீனா ஜூலியும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் கூறுகையில் “ எனது இளமை காலத்தில்  ஹார்வே வெயின்ஸ்டெயினிடம் மோசமாக அனுபவங்கள் பெற்று இருக்கிறேன். அதனால் அவருடன் சேர்ந்து மீண்டும் வேலை செய்யவில்லை. அவருடன் பணியாற்றும் நடிகைகளையும் எச்சரிக்கை செய்திருக்கிறேன். பெண்களிடம் இது போன்ற செயல்கள் எந்த துறையாக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் ஏற்றுகொள்ள முடியாது” என தெரிவித்தார்.

இந்த குற்றசாட்டுகள் வெளியான பிறகு ஹார்வி வெய்ன்ஸ்டீன், தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  தனது கடந்த கால தவறுக்கு மன்னிப்பு கோரிய வெய்ன்ஸ்டீன், அவற்றுள் பல குற்றசாட்டுகளை மறுத்துள்ளார். ஹார்வி வெய்ன்ஸ்டீன் குறித்த செய்து ஹாலிவிட்டின் விவாத பொருளாக மாறி உள்ளது.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV