இலங்கை செய்திகள்

பிரதி அமைச்சர் புத்திக பத்திரன வடக்கு விஜயம்

12 Feb 2019

பிரதி அமைச்சர் புத்திக பத்திரன இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி பரந்தன் இரசாயன தொழிற்காலை அமைந்திருந்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அங்கு அமைந்திருந்த இரசாயன தொழிற்சாலை பணிகளையும் பார்வையிட்டார். யுத்தத்தின்போது கைவிடப்பட்டிருந்த குறித்த தொழிற்சாலை சிதைந்திருந்ததை பார்வையிட்ட அவர்,  தொழிற்சாலை கைவிடுவதற்கு முன்னர் அங்கு பணிபுரிந்தவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

குறித்த தொழிற்சாலை அமைந்திருந்த காணியின் ஒரு பகுதி படையினரால் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்