இந்தியா செய்திகள்

பிரதமர் மோடியை பார்த்து பயப்பட மாட்டோம் - ராகுல் காந்தி உறுதி

05 Aug 2022

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது. டெல்லியில் உள்ள 'யங் இந்தியன்' அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் 'சீல்' வைத்தது.

சோனியாகாந்தி வீடு மற்றும் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு தடுப்புகள் வைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், இதுதொடர்பாக ராகுல்காந்தி முதல் முறையாக நேற்று கருத்து தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இவையெல்லாம் அச்சுறுத்தும் முயற்சிகள். ஆனால் நாங்கள் அச்சம் அடையவில்லை. பிரதமர் மோடியை பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம். அவர்கள் விரும்பியதை செய்து கொள்ளட்டும். அது பிரச்சினை அல்ல.

நான் நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க தொடர்ந்து பாடுபடுவேன். ாட்டில் நல்லிணக்கத்தை பராமரிப்பேன். அவர்கள் என்ன செய்தாலும், எனது பணியை தொடர்ந்து செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், ராகுல்காந்தி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சில நிர்பந்தங்கள் மூலம் பா.ஜனதா அரசு எங்கள் வாயை மூடலாம் என்று நினைக்கிறது. ஆனால் எங்கள் வாயை மூட முடியாது. மோடி, அமித்ஷா ஆகியோர் செய்வதை எதிர்த்து நிற்போம். அவர்கள் என்ன செய்தாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை.

உண்மையை தடுப்பு கொண்டு அடைக்க முடியாது. நீங்கள் நினைப்பதை செய்து கொள்ளுங்கள். நான் பயப்பட மாட்டேன். நாட்டு நலனுக்காக பணியாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam