இலங்கை செய்திகள்

பிரதமர் பதவியை ஏற்குமாறு கரு ஜெயசூரியவிடம் வேண்டுகோள்

13 Feb 2018

பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம், ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளதாக சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

 சம்பந்தப்பட்ட சகல தரப்பினர்களுடனும் கலந்தாலோசிக்காமல் தன்னால் அந்தக் கோரிக்கைக்கு இணங்கமுடியாது எனச் சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை,  பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலக்கவேண்டிய தேவை இல்லை எனவும், கட்சியின் தலைமைத்துவத்தை தனக்கு வழங்குமாறும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்