கனடா செய்திகள்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மெக்சிக்கோ பயணம்

12 Oct 2017

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இன்று மெக்சிக்கோவுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில்,  அங்கு NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

குறித்த இந்த விடயம் தொடர்பில் நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச்சுகளை நாடாத்திய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இன்று மெக்சிக்கோவின் தலைவர்களைச் சந்தித்து அது குறித்து மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

பெரும்பாலும் இந்த உடன்படிக்கையைக் கைவிடுவதற்கான ஆர்வத்தையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வெளியிட்டுவரும் நிலையில், கனேடிய பிரதமரின் இந்தப் பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்தனவாக  நோக்கப்படுகின்றன.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தியோகபூர்வமாக மெக்சிக்கோவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV