இலங்கை செய்திகள்

பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு இரு பிரதான கட்சிகளுமே காரணம் - சம்பந்தன்

12 Aug 2017

நல்லாட்சி அரசிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள்  தீர்க்கப்படாமைக்கு, ஐ.தே.கவும், சுதந்திரக் கட்சியுமே காரணம் என, எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய அரசில் அங்கம் வகிக்கும் பிரதான இரு கட்சிகளும், தங்களுக்குள்ளான அரசியலை கைவிட்டு மக்களின் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்றும், அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கெஸ்ராட்செதர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை)இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் சில விடயங்களை முன்னெடுக்கின்ற போதிலும், காணி விடுவிப்பு, காணாமல் போனவர்கள் விடயம், அரசியல் கைதிகள் விடயம் போன்றன தொடர்ந்தும் தாமதமாகிக் கொண்டே செல்கின்றன.

இதற்கு இரு பிரதான கட்சிகளிடையே நிலவும் அரசியலே காரணம். எனவே, கட்சிகளிடையிலான அரசியலை கைவிட்டு அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை தர வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV