உலகம் செய்திகள்

பின்லந்தில் வெட்டுக்கிளிகளைக் கொண்டு செய்யப்படும் ரொட்டி!

06 Dec 2017

பின்லந்திலுள்ள Fazer என்ற ரொட்டித் தயாரிப்பு நிறுவனம், நொறுக்கப்பட்ட வெட்டுக்கிளிகளைக் கொண்டு ரொட்டி ஒன்றைத் தயாரித்துள்ளது.

பூச்சிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ரொட்டியை வாடிக்கையாளர்களுக்கு விற்கும் முதல் நிறுவனமாக Fazer உள்ளது.

சாதாரணக் கோதுமை ரொட்டியைவிட இந்த ரொட்டி அதிகப் புரதச் சத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஃபின்லந்தில் அந்த ரொட்டிக்கான சட்ட அனுமதியைப் பெற்ற பிறகே அதற்கான விற்பனை தொடங்கியது.

பிரிட்டன், நெதர்லந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்காகப் பூச்சிகளை வளர்க்க அனுமதி உண்டு.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்