இலங்கை செய்திகள்

பிணைமுறி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லை - நீதியமைச்சர்

12 Jan 2018

பிணைமுறி விவகாரத்தில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முன்வைத்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோது இவ்வாறு குறிப்பிட்ட அவர், இந்த வழக்கு விசாரணைகள் துரித கதியில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், தார்மீக ரீதியில் தாம் பதவி விலகவும் தயாராக இருப்பதாகக் கூறிய அமைச்சர், குற்றச்சாட்டுக்களை யார் மீதும் எவர் வேண்டுமானாலும் சுமத்தலாம் என்றாலும் அவை நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV