இந்தியா செய்திகள்

பா.ஜ.க. கட்சிக்கு புதிதாக தேசிய துணைத்தலைவர்கள் நியமனம்

12 Jan 2019

மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் இந்த மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் தேசிய தலைவர் அமித்ஷா முனைப்பு காட்டி வருகிறார்.

இதனையடுத்து கட்சிக்கு புதிதாக தேசிய துணைத்தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி, முன்னாள் முதல்-மந்திரிகள் சிவராஜ்சிங் சவுகான் (மத்தியபிரதேசம்), வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்) மற்றும் ராமன்சிங் (சத்தீஷ்கார்) ஆகியோர் கட்சியின் தேசிய துணைத்தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக பொதுச்செயலாளர் அருண்சிங் தெரிவித்து உள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்