கனடா செய்திகள்

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் Athabasca பகுதி ஆசிரியர் ஒருவர் மீது குற்றச்சாட்டு

05 Dec 2018

முன்னாள் மாணவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய விசாரணையைத் தொடர்ந்து Athabasca பகுதியை சேர்ந்த ஆண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியர் சார்லஸ் பீமிஷ் என்ற 38 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர் Athabasca மாகாண நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதுடன், அவர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தைப் பற்றியோ அல்லது வேறு தகவலோ தெரிந்தால் றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்